3 டிராக்டர்கள்- பொக்லின் எந்திரம் பறிமுதல்
3 டிராக்டர்கள்- பொக்லின் எந்திரம் பறிமுதல்
நாகப்பட்டினம்
வாய்மேடு;
தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் மணல் கடத்தப்படுவதாகநாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த தகவலின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆய்மூர் பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர்கள் மற்றும் மணல் அள்ளும் பொக்லின் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆய்மூர் பகுதியைச் சேர்ந்த பொக்லின் எந்திரம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் மகன் இளையராஜா (36) மற்றும் அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27), பழனி குமார் (36) ஆகிய 3 பேர் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 5 போ் கைது செய்யப்பட்டு உள்ளனா்.
Related Tags :
Next Story