தொழிற்சங்கத்தினர் ஊர்வலம்
தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்களின் உரிமை முழக்க ஊர்வலம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு 4-ம் வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஊர்வலம், பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் அரசப்பன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story