கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது


கோவில்பட்டியில்  சிறுமியிடம் சில்மிஷம்-  போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது
x

கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

கோவில்பட்டி வடக்கு புது கிராமம் 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கரன் மகன் ரவிசங்கர் (வயது 53). சுக்கு காபி விற்பனை செய்து வருகிறார்.

நேற்று இவர் இதே பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு வீட்டு முன்பு நின்றிருந்த 12 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டாராம். சிறுமி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அந்த நேரத்தில் அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லை என்பதை சிறுமி மூலம் ரவிசங்கர் அறிந்து கொண்டார்.

கைது

பின்னர் அந்த வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சுக்கு காபி வியாபாரி ரவிசங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story