வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
சாத்தான்குளம் அருகே கடன்தொல்லையால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே கடன் தொல்லையால் மளிகை கடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மகன் டேவிட் (வயது 45). வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இவர் நாசரேத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். அதில் வியாபாரத்துக்காக சிலரிடம் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதேசமயம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் தொல்லையால் மனமுடைந்த வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.