எலி மருந்து சாப்பிட்ட வியாபாரி சாவு
வேட்டவலத்தில் எலி மருந்து சாப்பிட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66), பொாி, கடலை வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story