புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது


புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
x

கடையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள நடுப்பூலாங்குளத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சிவன்பாண்டி (வயது 40). மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் மைலப்பபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். இதில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவன்பாண்டியை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story