வியாபாரிக்கு கத்திக்குத்து;2 பேர் கைது
சமயநல்லூரில் வியாபாரியை கத்தியால் குத்திய;2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் சீமான் மகன் விமல் ஆனந்த் (வயது 30) இவர் பழைய இருசக்கர வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவந்தானை சேர்ந்த நவீன் என்பவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கினார். இந்நிலையில் நேற்று அச்சம்பத்தை சேர்ந்த ஜெயபால் (22) என்பவர் போன் செய்து என்னுடைய வண்டியை நவீனிடம் எப்படி வாங்கினாய். உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. பின் நேரில் வந்து கையில் வைத்திருந்த கத்தியால் விமல் ஆனந்த் கழுத்தில் குத்த வந்தபோது அதை அவர் தடுக்க முயன்றார். அப்போது அவரது இடது கையில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஜெயபாலுடன் வந்த கோபால் என்பவரும் விமல் ஆனந்தை கையால் அடித்து தாக்கியுள்ளார். இது சம்பந்தமாக விமல் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து ஜெயபால், கோபால் ஆகியோரை கைது செய்தார்.