மின்கம்பங்கள் மாற்றும் பணியால் வியாபாரிகள் பாதிப்பு


மின்கம்பங்கள் மாற்றும் பணியால் வியாபாரிகள் பாதிப்பு
x

மின்கம்பங்கள் மாற்றும் பணியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையின் இருபுறமும் ஜூன் மாதம் முதல் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கால்வாய்க்கு வெளிப்புறம் சாலையையொட்டி மின்கம்பங்கள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வந்தன. இதனால் நெடுஞ்சாலை துறையினர் மின்வாரியத்திடம் மின் கம்பங்களை மாற்றி அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். மின்வாரிய ஊழியர்கள் பணிகளை மேற்கொள் இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது. ஏற்கனவே இருந்த 33 மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை மாற்றுவதற்காக போக்குவரத்துமாற்றி அமைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த போக்குவரத்து மாற்றத்தை பொங்கல் கழித்து செய்திருக்கலாம் எனவும், இல்லையென்றால் டிசம்பர் மாதமே செய்திருக்கலாம் என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story