ஆறுமுகநேரியில் வியாபாரிகள் சங்க கூட்டம்
ஆறுமுகநேரியில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாக குழு கூட்டம் தலைவர் த.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. சங்க துணை தலைவர் ஆர்.கிழக்கத்தி முத்து, செயலாளர் சு.துரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சு.ராஜாராம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் வி. கே. எம். பாஸ்கரன் ஏ. அழகேசன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில். ஆறுமுகநேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கம்பியாளர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கிறார். அவரும் உடல் நலமின்றி விடுப்பில் உள்ளார். ஆறுமுகநேரி பகுதியில் உள்ள வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் சரிசெய்வதற்கு ஓரிரு நாட்கள் ஆகிறது. எனவே, உடனடியாக ஆறுமுகநேரிக்கு ஏற்கனவே இருந்த 5 மின் கம்பியாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story