மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்
திருச்சி
திருச்சி வயலூர்சாலை உய்யகொண்டான்திருமலை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் வாரச்சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை நலச்சங்க தலைவர் முருகேசன், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கரிகாலன் ரவி ஆகியோர் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் மாநகராட்சி கோ-அபிஷேகபுர கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது வாரச்சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story