புதுப்பட்டினம் கடைவீதியில் வியாபாரிகள் சாலை மறியல்


புதுப்பட்டினம் கடைவீதியில் வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் வியாபாரிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது.இந்த கடையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நாசர்(வயது 63) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையும், அதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தி (65) என்வருக்கு சொந்தமான பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் தண்ணீர் பாட்டில் மற்றும் கப்புகள் விற்பனை செய்வதாக கூறி இவர்கள் இருவரின் மீதும் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், மேலும் கிராம் நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுடன் வந்து இரண்டு கடைகளையும் சீல் வைக்கப் போவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவர் குபேந்திரன் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 300 பேர் திரண்டு பழையாறு துறைமுகத்திலிருந்து புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்கும் முடிவை கைவிடுவதாகவும், இரு கடை வியாபாரிகள் மீது பதியப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story