வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்
சில்லறை விற்பனைக்கடைகளில் ‘டெஸ்ட் பர்சேஸ்’ முறையை கைவிடக்கோரி வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஊர்வலமாக சென்று வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சில்லறை விற்பனைக்கடைகளில் 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை கைவிடக்கோரி வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஊர்வலமாக சென்று வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடைகளை அடைத்து போராட்டம்
வணிக வரித்துறையினர் கடைகளுக்குள் வந்து 'டெஸ்ட் பர்சேஸ்' என பொருட்களை வாங்கி அதற்கு உரிய ரசீது இல்லை எனக் கூறி அபராதம் விதிக்கின்றனர். அது போலவே சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு, சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.எனவே, வணிக வரித்துறையினரால் சில்லறை விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்படும் 'டெஸ்ட் பர்சேஸ்' சரக்கு வாகனத் தணிக்கை போன்றவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், டெஸ்ட் பர்சேஸ் குறித்து வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நேற்று மயிலாடுதுறையில் காலை 11 மணி அளவில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலம்
இதை தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் சிவசுப்ரமணியன் உள்பட மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மயிலாடுதுறை காவிரி நகரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேம்பாலம் வழியாக சென்று சித்தர்க்காட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் வணிகவரி அலுவலகத்தில் மனு அளித்தனர்.