பா.ஜ.க.வர்த்தக பிரிவு சார்பில் வணிகர்கள் மாநாடு
வேளாங்கண்ணி அருகே பா.ஜ.க.வர்த்தக பிரிவு சார்பில் வணிகர்கள் மாநாடு
வேளாங்கண்ணி:
நாகை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வர்த்தக பிரிவின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு தெற்கு பொய்கைநல்லூர் கே.வி.பி.அரங்கத்தில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட வர்த்தக அணி பிரிவு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வைரமுத்து முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, மாவட்ட செயலாளர் மகாதேவன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் தீபக் ரங்கராஜன் கலந்து கொண்டு, பிரதமர் மோடி கொண்டு வந்த கிராமப்புற மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம், மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் காளிமுத்து, மாவட்ட செயலாளர்கள் விஜயேந்திரன், குமார், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி துணை தலைவர் அர்ஜுனன், செயலாளர் தமிழ்ச்செல்வம், குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் சின்னப்பிள்ளை, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் செல்வகுமார் நன்றிகூறினார்.