போலீசாருக்கு வர்த்தகர்கள் பாராட்டு


போலீசாருக்கு வர்த்தகர்கள் பாராட்டு
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளம்பர பேனர்களை அகற்றிய போலீசாருக்கு வர்த்தகர்கள் பாராட்டு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெரு, பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், திருமண விழா பேனர்கள் மற்றும் நினைவஞ்சலி பேனர்கள் உள்ளிட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வந்தது. இதுகுறித்து வாய்மேடு போலீசாருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், அப்பகுதி வர்த்தக நலச்சங்கமும், பொதுமக்களும் புகார் அளித்தனர். இதையடுத்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து ஆயக்காரன்புலம் கடைத்தெரு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அப்புறப்படுத்தியதோடு, இப்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என்று அறிவிப்பு போர்டும் வைத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுத்த வாய்மேடு போலீசாருக்கும், ஆயக்காரன்புலம் வர்த்தக நலச்சங்கத்திற்கும், நேதாஜி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கும், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நன்றி தெரிவித்தனர்.



Next Story