தெற்கு திட்டங்குளத்தில்வியாபாரிகள் தொடங்கியதினசரி சந்தைக்கு தடை

தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு திட்டங்குளத்தில்வியாபாரிகள் தொடங்கிய தினசரி சந்தைக்கு யூனியன் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் ரூ.2.84 கோடி செலவில் 250 கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக அங்குள்ள கடைகளை ் இடிக்கும் பணி 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடியும் வரை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்காக கூடுதல் பஸ் நிலையத்தில் கடைகள் அமைப்பதற்கு கனிமொழி எம்பி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், நகரசபை தலைவர் கருணாநிதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 20 மொத்த விற்பனை கடைகள், 20 சில்லறை விற்பனை கடைகள் அமைத்து, நேற்று முன்தினம் காலையில் விற்பனையை தொடங்கினார்கள். இந்த சந்தை முறையாக அனுமதி பெற்று ஆரம்பிக்கப் படவில்லை என்று உதவி

கலெக்டரிடம் பல்வேறு தரப்பில் புகார்

தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நேற்று தெற்கு திட்டங்குளம் சந்தைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Next Story