வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடலில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுபோன்று கடைகளில் தாக்குதல் சம்பவம் நடந்து வருவதை கண்டித்து நேற்று முக்கூடலில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, முக்கூடல் போலீஸ் நிலையத்தை அடைந்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், 'முக்கூடலில் வியாபாரிகளுக்கு ஒரு சில ரவுடிகளால் அடிக்கடி இடையூறு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வியாபாரிகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. இதுதொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story