பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம்


பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம்
x

பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது

திருவாரூர்

கொரடாச்சேரி அருகே அகரத்திருநல்லூர் ஊராட்சி சமுதாய கூடத்தில் தாய்மண் பாரம்பரிய வேளாண்சார் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். என்ஜினீயர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை துணை இயக்குனர் லஷ்மிகாந்தன் திட்ட விளக்கவுரையாற்றினார். கனரா வங்கி முதுநிலை மேலாளர் தினேஷ்குமார் வங்கி சார்பில் அளிக்கப்படும் உதவிகள் மற்றும் கடன் பெறுவது குறித்து எடுத்துக் கூறினார். முன்னதாக இயக்குனர் சுதாகர் வரவேற்றார். முடிவில் இயக்குனர் சாந்தி நன்றி கூறினார். கூட்டத்தில் விவசாய ஆர்வலர்கள், குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய இயக்குனர்களாக தென்னரசு மற்றும் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டனர்.

பாரம்பரிய நெல் சாகுபடியை அரசு ஊக்குவிக்கவும், அதற்கான செயல் திட்டங்களை தீட்டவும் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகளுக்கு உதவுவது மற்றும் சங்கத்தின் மூலம் விதை, உரம் இவைகளை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story