பாரம்பரிய உணவு திருவிழா


பாரம்பரிய உணவு திருவிழா
x

கரியாலூரில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட கரியாலூர் கிராமத்தில் மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைகள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், குழந்தைகள், பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பாரம்பரியத்தை மீட்கும் வகையில் ஆண்டுதோறும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தி அழிந்து போன சிறுதானிய உணவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்களின் வாழ்வில், இன்றியமையாத ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுவது தாய்மை அடைவதாகும். அந்த தாய்மையை போற்றும் விதமாகவும், சிறப்பிக்கும் வகையிலும் வளைகாப்பு விழாவும் நடத்தப்பட்டு வருகிறது என்றார். விழாவில் கல்வராயன்மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் .செல்வி, கல்வராயன்மலை ஒன்றியக்குழுதலைவர் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், தாசில்தார் சையத் காதர், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலமேலு சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணிகிருஷ்ணன் ரத்தினம், பாப்பாத்தி சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன். சின்னத்தம்பி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story