50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
சீர்காழியில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்
சீர்காழி:
சீர்காழியில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
50 சதவீதம்
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சிலி சம்பா நெல் ரக விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படுகிறது.
10 கிலோ
சீர்காழி வட்டாரத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், காரைமேடு, திருவெண்காடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரக விதைகள் ஒரு கிலோ முழு விலை (ரூ.25) 50 சதவீத மானியத்தில் 12 ரூபாய் 50 பைசா செலுத்தி பயன்பெறலாம். ஒரு விவசாயிக்கு 10 கிலோ விதை மட்டும் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.