அந்தியூரில் ரோட்டில் ஆயில் சிந்தியதால் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூரில் ரோட்டில் ஆயில் சிந்தியதால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டிக்கொண்டே சென்றது. இதனால் அந்த லாரியின் பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் தடுமாறினார்கள். இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கீழே விழுந்தார்கள். இதுபற்றி உடனே அந்தியூர் போக்குவரத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஆயில் கசிந்த இடங்களில் டயர்களை வைத்து போக்குவரத்தை நிறுத்தினார்கள். அதன்பின்னர் மணலை போட்டு ஆயிலின் வளவளப்பை சரிசெய்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது.
Related Tags :
Next Story