சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் ேநற்று அதிகாலையில் குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறை- வெட்டிமுறிச்சான் இடையே கால்வாய் கரையில் பட்ட நிலையில் நின்ற ஒரு அயனி மரம் திடீரென சாய்ந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதில் அந்த வழியாகச் சென்ற மின் கம்பிகள் அறுந்தன. அத்துடன் 9 மின்கம்பங்கள் மற்றும் ஒரு மின்மாற்றி ஆகியவை சாய்ந்து சேதமடைந்தன. அத்துடன் மரம் சாய்ந்ததால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றி மின் இணைப்பை சரி செய்தனர். அதன்பின்பு அந்த வழியாக வாகன போக்குவரத்து நடந்தது. மரம் விழுந்த போது அந்தவழியாக யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story