தனியார் கல்லூரி பஸ் பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு
வேலப்பாடியில் தனியார் கல்லூரி பஸ் பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் வேலப்பாடியில் தாலுகா அலுவலகம் அருகே சாலையில் தனியார் கல்லூரி பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவின் அருகே சென்றபோது பஸ் திடீரென பழுதாகி சாலையிலேயே நின்றது. இதனால் அந்த பகுதியில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து சுமார் 1 மணிநேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story