வேலூரில் போக்குவரத்து மாற்றம் ரத்து
வேலூரில் போக்குவரத்து மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார்.
இதையொட்டி வேலூரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுதொடர்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் வேலூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் சென்று வரலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story