பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணி: நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது


பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணி: நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
x

பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி பொக்லைன் எந்திரங்கள் மூலமாக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சாலையில் நேற்று காலை முதல் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாறு போலீஸ் நிலையம் பகுதியில் சாலையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இதே போல் சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு பணிகள் நடைபெற்றது. இருப்பினும் இருசக்கர வாகனங்கள் அந்த சாலையின் வழியாக சென்று வந்தனர். வாகன ஓட்டிகள் கோட்டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழியாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக கோட்டார் சென்றன. இதே போல் கன்னியாகுமரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் பீச் ரோடு சந்திப்பில் இருந்து ஆயுதப்படை முகாம் ரோடு, ராமன்புதூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக இயக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story