முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முதல்-அமைச்சர் வருகை
வேலூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி (நாளை மறுநாள்) வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து சித்தூர் மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் சாத்துமதுரை சந்திப்பில் இருந்து ஊசூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்ல வேண்டும்.
சித்தூர் மார்க்கத்தில் இருந்து திருவண்ணாமலை மற்றும் ஆரணி செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக மற்றும் குடியாத்தம், பள்ளிகொண்டா, ஊசூர், சாத்துமதுரை வழியாக செல்ல வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு தடை
உள்ளூர் சரக்கு வாகனங்கள் மண்பாடி லாரிகள், கனரக வாகனங்கள் 21-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநகருக்குள் சரக்குகளை ஏற்ற, இறக்க மற்றும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துகள், பஸ்கள், கார்கள், அனைத்தும் அன்றைய தினத்தில் அரியூர் மார்க்கம் மற்றும் ஆரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநகருக்குள் வரும் பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்து பாகாயம் ,சங்கரன்பாளையம், வேலப்பாடி, கோட்டை சுற்றுசாலை வழியாக செல்ல வேண்டும்.
சத்துவாச்சாரி, காட்பாடி, பள்ளிகொண்டா மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிரீன்சர்க்கிள் வழியாக நேஷ்னல் சந்திப்பு, பேலஸ் சந்திப்பு, லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.