சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று, காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story