தச்சநல்லூரில் போக்குவரத்து மாற்றம்
கழிவநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்காக தச்சநல்லூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் ரவுண்டானா அருகே கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் தச்சநல்லூர் ஊருக்குள் சென்று ராம் தியேட்டர் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக நேற்று இரவு தச்சநல்லூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் சிரமம் அடைந்த வாகன ஓட்டிகள், விரைவில் குழாய்கள் பதிக்கும் பணியை முடித்து வழக்கமான பாதையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story