கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல்


கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல்
x

தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் ஜவகர் பஜாரில் மக்களின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரூர்

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்குவதற்காக கரூரில் கடந்த சில நாட்களாக கடைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது. கடந்த 16-ந்தேதி விடுமுறை தினம் என்பதால் கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பேன்சி கடைகள், செருப்பு கடைகள், ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

பெரும்பாலான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் வருகின்றனர். இதனால் கரூர் ஜவகர்பஜார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நான்கு வழிச்சாலை உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆங்காங்கே போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story