குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல்


குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல்
x

வடலூர் அருகே குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர்

வடலூர்:

வடலூர்-பண்ருட்டி நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இருப்பினும் வடலூர் அருகே கண்ணுதோப்பில் உள்ள குறுகிய பாலத்தால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு அங்கு விரிவுப்படுத்தப்பட்ட புதிய பாலம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்தை விட வடலூர்-பண்ருட்டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. ஆனால் குறுகிய பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story