முகூர்த்த தினத்தையொட்டி பட்டுச்சேலை வாங்க குவிந்த மக்கள் - காஞ்சிபுரம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்


முகூர்த்த தினத்தையொட்டி பட்டுச்சேலை வாங்க குவிந்த மக்கள் - காஞ்சிபுரம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

பட்டுச்சேலை வாங்குவதற்காக மக்கள் குவிந்த நிலையில், காஞ்சிபுரம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

சித்திரை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்தம், அட்சயதிரியை மற்றும் குருபெயர்ச்சி ஆகியவற்றை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை வாங்க அதிக அளவில் மக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பலர் தங்கள் சொந்த வாகனங்களில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக காஞ்சிபுரம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பட்டுச்சேலை கடைகள் அதிகம் இருக்கும் முக்கிய வீதிகளான காந்தி சாலை, காமராஜர் வீதி, வள்ளல் பச்சையப்பன் வீதி, நெல்லுகார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெருக்கடி காணப்பட்டது.


Next Story