போக்குவரத்து விதிமீறல்; ரூ.14 ஆயிரம் அபராதம்


போக்குவரத்து விதிமீறல்; ரூ.14 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

தமிழகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி ரோந்து பணி சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், வாகன பதிவு எண் இல்லாத வாகனங்களை இயக்கியவர்கள் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள புதிய அபராத தொகை குறித்து போலீசார் எடுத்துக் கூறினர். மேலும் போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்றி அபராதம் விதிப்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story