செம்மண் கடத்தல்; டிரைவர் கைது


செம்மண் கடத்தல்; டிரைவர் கைது
x

செம்மண் கடத்தல்; டிரைவர் கைது

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பொட்டகுழி பகுதியை சேர்ந்தவர் ஜான் பென்ஸ் (வயது 37). இவர் அந்த பகுதியில் அனுமதி இன்றி டெம்போவில் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கருங்கல் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டவுடன் ஜான் பென்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதே சமயம் டெம்போ டிரைவர் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் செம்மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், டெம்போவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story