மதுரையில் பரிதாபம்: சிமெண்ட் கலவை லாரி மோதி பெண் பலி; கணவர் படுகாயம்


மதுரையில் பரிதாபம்: சிமெண்ட் கலவை லாரி மோதி பெண் பலி;    கணவர் படுகாயம்
x

மதுரையில் சிமெண்ட் கலவை லாரி மோதி பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவரது கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை


மதுரையில் சிமெண்ட் கலவை லாரி மோதி பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவரது கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கலவை லாரி மோதியது

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவரது மனைவி சரண்யா (25). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரண்யாவின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக அவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் இருவரும் காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி மோட்டார் சைக்கிளை முந்தி செல்லும் போது மோதியது.

பெண் பலி

இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி இருவரும் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே சரண்யா உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் ராஜ்குமார் காலில் லாரி ஏறி இறங்கியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகல் நேரத்தில் நகரில் இது போன்ற சிமெண்ட் கலவை லாரிகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இரவு நேரத்தில் மட்டுமே இது போன்ற லாரிகளை நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே போக்குவரத்து போலீசார் இதில் தனி கவனம் செலுத்தி நகருக்குள் இதே போன்ற லாரிகளை பகல் நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.


Next Story