மதுரையில் பரிதாபம்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை- கணவருக்கு தீவிர சிகிச்சை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை இல்லை
மதுரை தெப்பக்குளத்தை அடுத்த ஐராவதநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 26). இவருடைய கணவர் அருண்குமார். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தனர். ஆனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் இருவரும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அருண்குமாரும், ஜெயலட்சுமியும் விபரீத முடிவு எடுத்து நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டுள்ளனர்.
பெண் சாவு
அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கணவன், மனைவிைய மீட்டனர். உயிருக்கு போராடிய அவர்கள் இருவரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அருண்குமாருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த தெப்பக்குளம் போலீசார் அங்கு சென்று ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.