தூத்துக்குடியில் பரிதாபம்: நர்சிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் நர்சிங் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நர்சிங் மாணவி
தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஹரினி (வயது 20). இவர் தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஹரினி வீட்டில் வைத்து விஷம் குடித்தார். உடனடியாக ஹரினியை அவரது பெற்றோர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இது குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மாணவியுடன் விருதுநகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பழக்கம் இருந்ததாகவும், அந்த வாலிபர்தான் ஹரினியின் சாவுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்தனர்.
அந்த வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்று வலியுறுத்தினர்.
பரபரப்பு
இதனால் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாணவியின் உடல் அரசு