மேலூர் அருகே பரிதாபம்: மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி சாவு


மேலூர் அருகே பரிதாபம்: மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி சாவு
x

மேலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி பலியானார்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி பலியானார்.

விவசாயி சாவு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியை அடுத்துள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அழகு (வயது 60).விவசாயி. இவர் தினசரி மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்.

அதன்படி நேற்று காலை தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு அழகு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மின்கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. உயர் மின்னழுத்த கம்பி என்பதால் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு இறந்தார். இது குறித்து கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய மின்கம்பிகள் பொருத்த வேண்டும்

கடந்த சில நாட்களுக்கு முன் கல்லம்பட்டியில் மின் கம்பி அறுந்து விழுந்து 8 ஆடுகள் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பிகள் அபாய நிலையில் இருப்பதாகவும் புதிய மின்கம்பிகள் பொருத்திட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story