ராமேசுவரம்-திருப்பதி ரெயில் 7 மணி நேரம் தாமதம்
ராமேசுவரம்-திருப்பதி ரெயில் 7 மணி நேரம் தாமதம்
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ராமேசுவரம் பணிமனையில் கட்டுமான சீரமைப்பு பணி நடந்து வருதால், அனைத்து ரெயில்களும் மதுரையில் பராமரிப்பு செய்யப்படுகின்றன. இதனால், ரெயில்கள் இயக்கத்தில் அவ்வப்போது தாமதம் ஏற்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதி வரை இயக்கப்படும் வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16780) பெட்டிகள் பராமரிப்பு பணி காரணமாக நேற்று மாலை 4.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக சுமார் 7 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் இரவு 7.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. இதனால், இந்த ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
Related Tags :
Next Story