ரெயில் விபத்து எதிரொலி: 6 ரெயில் சேவை ரத்து- தெற்கு ரெயில்வே தகவல்
ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மங்களூருவில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாஞ்சி செல்லும் விவேக் விரைவு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாளை காலை 8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏ.சி.விரைவு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கவுகாத்தியில் இருந்து 6ம் தேதி காலை 6.20 மணிக்கு பெங்களூரு செல்லும் வாராந்திர ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7ம் தேதி மதியம் 2 மணிக்கு காமாக்யாவில் இருந்து பெங்களூரு புறப்படவேண்டிய விரைவு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story