ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு


ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
x

ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்தார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:-

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி மாதா கோவில் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, தஞ்சை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story