முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மென்திறன் பயிற்சி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மென்திறன் பயிற்சிமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மென்திறன் பயிற்சிமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மென்திறன் பயிற்சி
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சேலம் மண்டல மையம் சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மென்திறன் பயிற்சி நேற்று ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். சேலம் மாவட்ட துணை கலெக்டர் குமார் மற்றும் உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பயிற்சியில் தற்போதைய சூழலில் ஆசிரியர்களின் பங்கு மற்றும் முன்மாதிரியான குணங்கள் குறித்து ஆசிரியர் ஞானசேகரன் பேசினார். இதையடுத்து ஆசிரியர்களின் தலைமைத்துவ திறன்கள் குறித்து ஆசிரியர் அருள்குமார் பேசினார். பயிற்சியின் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியர் மகேஷ், யோகா மற்றும் தளர்வு நுட்பங்கள் குறித்து ஆசிரியர் தனலட்சுமி ஆகியோர் பேசுகிறார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.