பால் உற்பத்தியாளர்களுக்கு பசுந்தீவன வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி


பால் உற்பத்தியாளர்களுக்கு பசுந்தீவன வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பசுந்தீவன பயிர் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

தொழில்நுட்ப பயிற்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு பசுந்தீவன பயிர் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி முகாம் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பசுந்தீவன உற்பத்தியில் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.

மையத்தின் தலைவர் கண்ணதாசன் வரவேற்றார். ஆவின் பொது மேலாளர் காமராஜ் விவசாயிகள் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முகாமில் பசுந்தீவனம் வளர்த்தல், பாதுகாத்தல், கறவை மாடுகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கும் முறைகள், தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மூலிகை மருத்துவம்

இதைத்தொடர்ந்து மூலிகை பண்ணை அமைத்து கறவை மாடுகளின் வளத்தை மேம்படுத்துதல், விவசாய பண்ணைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து பேராசிரியர்கள் விரிவாக பயிற்சி அளித்தனர்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வளர்ப்பு, மரபு சார் மூலிகை மருத்துவம் குறித்து பயிற்சி கையேடு மற்றும் விதை பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.இதில் உதவி பொது மேலாளர் மணிவண்ணன், மேலாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், கால்நடை வளர்ப்பு விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story