வெளிச்சந்தையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்
வெளிச்சந்தையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்தது.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ராதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். மாநில இணை அமைப்பாளர் பிரபோஷ்குமார், மாநில தலைவர் டாக்டர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த முகாமில் பாலக்கோடு ஒன்றிய தலைவர் பத்ரிநாராயணன், முகாம் தலைவர் மணிவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஜீ நன்றி கூறினார்.
Related Tags :
Next Story