கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்,
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் வட்டார அளவிலான கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி தலைமை தாங்கினார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெயலெட்சுமி, கணேசன், கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். எழுத்தறிவு திட்டம் குறித்து முழு விளக்கங்கள் எடுத்து கூறப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள கல்வி தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story