இலவச சதுரங்க பயிற்சி முகாம்
ஒரு நாள் இலவச சதுரங்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடியில் பிரைன் பாக்ஸ் அகாடமியின் சார்பாக ஒரு நாள் இலவச சதுரங்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை தாங்கி அகாடமியையும், பயிற்சி முகாமையும் தொடங்கி வைத்தார். பிரைன் பாக்ஸ் அகாடமியின் இயக்குனர் ராமு வரவேற்றார். மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன், மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலாளர் பிரகாஷ்மணிமாறன் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்கள் சார்லஸ் ஜான் கென்னடி மற்றும் காசிநாதன், வள்ளுவர் பேரவையின் நிறுவன தலைவர் செயம்கொண்டான் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பிரைன் பாக்ஸ் அகாடமியின் இயக்குனர் காயத்ரி நன்றி கூறினார். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.