காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்
கோவில்பட்டியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டப் பொறுப்பாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்துாரி சுப்புராஜ் தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சத்துணவு திட்ட துணை ஆணையாளர் தனலட்சுமி மைய பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 11 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த காலை உணவு திட்ட பொறுப்பாளர்களுக்கு முதல் கட்டமாக வரதம்பட்டி பஞ்சாயத்து முத்துமாரி, ஆவல்நத்தம் பஞ்சாயத்து உமாமகேஸ்வரி, சத்திரப்பட்டி கனகா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சியாளர்கள் ஏற்கனவே தேர்வு ெசய்யப்பட்ட 38 பஞ்சசாயத்து மைய பொறுப்பாளர்களுக்கு 2 நாள் வீதம் 3 கட்டங்களாக பயிற்சி முகாம் நடக்கிறது. மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.