அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
x

சென்னங்குப்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. கே.வி.குப்பம் ஒன்றிய அளவில் அரசு பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். வரும் கல்வி ஆண்டிற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களைக் கற்பித்தல், அரும்பு, மொட்டு, மலர் என்ற 3 பகுதிகளாக எழுத்து அறிதல், எழுத்தைக் கூறுதல், சொற்களைப் படித்தல் ஆகிய நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இம்முகாமை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சு.தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார கல்வி அலுவலர் பா.சுமதி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சி.குமார், ஒருங்கிணைந்த கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் என்.ஜி.சிவகுமார், வட்டார வளமைய ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதில் 95 பள்ளிகளில் இருந்து 115 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story