ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:30 AM IST (Updated: 5 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டியில் தொடக்க நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடக்க நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அய்யம்பாளையம் குறுவள மையத்தில் நடந்தது. இப்பயிற்சி முகாமில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியும், 3, 4-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சிகளை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அளித்தனர். இதேபோல் ஆத்தூர் வட்டாரத்தில் சித்தரேவு, சித்தையன்கோட்டை, செட்டியபட்டி, சின்னாளப்பட்டி, பஞ்சம்பட்டி, ஆத்தூர், வி.கூத்தம்பட்டி ஆகிய 7 இடங்களிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.


Next Story