தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
காட்பாடியில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேலூர்
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட கருத்தாளர்கள் கே.பழனி, செ.நா.ஜனார்த்தனன், க.ராஜா, கா.பா.சிவஞானம், எம்.நாகலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முதுகலை ஆசிரியர்கள் ஜி.பூபதி, லீலாகிருஷ்ணன், கணினி பயிற்றுனர் மா.முருகன் ஆகியோர் பாடப்பொருள் குறித்து பேசினர்.
தேசிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மாநிலத் திறன் மேம்பாட்டு கழகம் அங்கீகாரம் பெற்ற தொடர்புடைய துறை திறன் கழகங்கள் மூலம் நடைமுறை மதிப்பீட்டிற்கான திறன் சான்றிதழ் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்.
முடிவில் கோபி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story