காவல்துறை, முப்படைகளில் சேர விண்ணபிப்பது குறித்த பயிற்சி முகாம்; சபாநாயகர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்
களக்காட்டில் காவல்துறை, முப்படைகளில் சேர விண்ணபிப்பது குறித்த பயிற்சி முகாமை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
களக்காடு:
களக்காட்டில் காவல்துறை, முப்படைகளில் சேர விண்ணபிப்பது குறித்த பயிற்சி முகாமை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.களக்காட்டில் காவல்துறை, முப்படைகளில் சேர விண்ணபிப்பது குறித்த பயிற்சி முகாமை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பயிற்சி முகாம்
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஏற்பாட்டில், களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் காவல்துறை மற்றும் முப்படை பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. அதனுடன் சேர்ந்து நாமும் வளர அரசியல் தலைவர்கள் வழிகாட்ட வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றபோது, தகவல் தொழில் நுட்பம், கணினியில் பொதுமக்களுக்கு புரிதல் இல்லாமல் இருந்தது. தகவல் தொழில் நுட்பத்தை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னையில் டைடல் பார்க்கை தொடங்கினார்.
தற்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதற்கும், அத்துறையில் பல லட்சம் பேர் வேலை பார்ப்பதற்கும் காரணமாக திகழ்ந்தவர் கருணாநிதி ஆவார்'' என்றார்.
களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரூபி மனோகரன் சாரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சுற்றுச்சூழல் தினவிழா
நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார் இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு பசுமை
முதன்மையாளர் விருதுகளை வழங்கினார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பேணிகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளாஸ்டிக் பைகளக தவிர்த்து, துணிப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தை பெருமைபடுத்தும் விதமாக தூய பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பசுமை முதன்மையாளர் விருதை மாநில அளவில் 100 பேருக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.
பசுமை முதன்மையாளர் விருது
நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி தண்ணீரை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரங்கள் நடும் வழக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றும், பருகும் குடிநீரும் சுத்தமாக கிடைப்பதற்கு மரம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பசுமை முதன்மையாளர் விருது ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் இந்த விருதுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம் மதிவாணன், மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பொன்னையா, டாக்டர் திருமகள் ஆகிய மூவருக்கும் விருதுகளையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
முன்னதாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் திருநாவுக்கரசு நீர்வளம் பற்றிய கருத்துரை பேணினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு மையம் சுயம்பு தங்கராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மகளிர் திட்டம் அலுவலர் சாந்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.