திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம்
x

சீர்காழியில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்தும் திராவிட மாடல் குறித்தும் பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பேரூர் கழக செயலாளர் அன்புசெழியன் மற்றும் மாவட்ட, நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


Next Story